`டாஸ்மாக்கை அகற்றல… இனி கிராம சபையே நடக்காது!’ – புறக்கணித்த பெரியகுரும்பத் தெரு மக்கள்; தீர்வு? | Villagers Boycott Gram Sabha Over Tasmac Shop: Will the Issue Be Resolved

Spread the love

இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் டாஸ்மாக் மேலாளர் தரப்பில் மனுதாரருக்கு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால் கடையை இடமாற்றம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக மக்கள் கூறுகின்றனர்.

“ஒருமுறை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிச்சிருந்தோம். அப்போ காவல்துறை டிஎஸ்பி வந்து விசாரிச்சாங்க. ‘சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருக்கு. அதனால கண்டிப்பா இந்த டாஸ்மாக்கை இடமாற்றம் செஞ்சுருவோம். அது முடியலைன்னா ஹோல்ட் பண்ணி வைப்போம்’னு உறுதி அளிச்சாங்க.அந்த உறுதியை நம்பித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டோம். ஆனா இன்னும் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படல” என்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி (02/10/26) காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை பெரியகுடும்ப தெரு மக்கள் புறக்கணித்துள்ளனர்.

“இனிமேல் பெரிய குரும்பத் தெரு கிராமத்தில் கிராம சபைக் கூட்டமே நடக்காது கிராமசபை கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். இந்தக் டாஸ்மாக் கடையை எடுக்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுக்கப் போறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக மக்கள் முன்வைத்து வரும் இந்தக் கோரிக்கைக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, மாணவிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அவர்கள் முன்வைக்கும் பிரச்னைகளை கருத்தில்கொண்டு, டாஸ்மாக் கடை தொடர்பாக அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரிய குரும்பத்தெரு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *