தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி 2018-ம் ஆண்டு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
அந்தப் போராட்டத்தின் 100வது நாளான மே-18ம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டாலும், வன்முறையாலும் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடியது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை, தமிழக அரசுடன் இணைந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி வென்றது.
இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் ”பசுமைத் தாமிர உருக்காலை” என்ற பெயரில் மீண்டும் ஆலை தொடங்க அனுமதி கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.