டிரம்ப் மட்டுமில்லை.. மொத்த குடும்பத்தையும் கொல்ல ரெடியான ஈரான்? சவப்பெட்டி போஸ்டரால் பதற்றம் | Blood for Blood: Is Iran decided to kill Doanld Trump whole family? photos released with coffins

Spread the love

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமின்றி அவருடை மனைவி, மகள், மகன்கள் என்று மொத்தம் 7 பேரை கொல்ல ஈரான் தயாராகிவிட்டதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் இந்த செயல் அமெரிக்காவை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்களை குறிவைத்து ‘அட்டாக்’ நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் மீண்டும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

blood-for-blood-is-iran-decided-to-kill-doanld-trump-whole-family-photos-released-with-coffins

அதுமட்டுமின்றி விரைவில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது இன்னும் வலுவான தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாகவும், இதற்காக இஸ்ரேலுக்கு அமெரிக்கா வானிலேயே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தான் ஈரானும், அமெரிக்காவை தொடர்ந்து சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் இன்று வெளியிட்டுள்ள போட்டோ அமெரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப், மகன் – மகள்களான இவாங்கா டிரம்ப், டான் ஜூனியர் எரிக், டிப்பனி, பரோன் டிரம்ப் ஆகியோரின் இறந்து சவப்பெட்டியில் இருப்பது போல் போட்டோவை வெளியிட்டுள்ளது.

ஈரான் தலைநகரான டெஹ்ரானின் மத்திய பகுதியில் இதுதொடர்பான பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் ‘Blood For Blood’ என ஈரான் நாட்டின் பெர்ஷியன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதாவது பழிக்கு பழி என்பது போல் ரத்தத்துக்கு ரத்தம் என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் எங்கிலாப் சதுக்கத்தில் டொனால்ட் டிரம்ப் சவப்பெட்டியில் படுத்து கிடப்பது போன்று பேனர் வைககப்பட்டுள்ளது. அதில் அவரது தலைமுடி கலைந்தும், கண்கள், வாய் மூடி நிலையிலும் உள்ளன.

அதாவது ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி தொடங்கிய முதல் நாள் போரிலேயே கொல்லப்பட்டார். அதேபோல் அவரது மகனும் அடுத்த உச்சபட்ச தலைவராக அறிவிக்கப்பட்ட மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்துள்ளார். அவர் இன்னும் பொதுவெளிக்கே வரவில்லை. அவரது நிலை என்ன? என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

இதுதவிர பல முக்கிய அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவை பழிக்கு பழி வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமின்றி அவரது மொத்த குடும்பத்தையும் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ஈரானுக்கும் நீண்டகால பகை உள்ளது. அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது டிதுப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என்று டிரம்ப் கூறினார். சமீபத்தில் கூட ஈரானின் ‘ஹிட் லிஸ்ட்டில்’ முதல் பெயராக என்னுடைய பெயர் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கவனிக்க வேண்டிய மேட்டர் என்னவென்றால் ஈரான் எப்போதுமே அரசியல் சார்ந்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க பொது இடங்களில் விளம்பரம் செய்வது அல்லது பேனர் வைப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய பிறகு இந்த இடங்களில் ஈரான் தனது நாட்டின் வலிமை, போர் நினைவிடங்கள், மக்களை ஒருங்கிணைப்பு செய்யும் கருத்தில் சார்ந்த விஷயங்களை இந்த போர்டுகளில் வைத்தது. தற்போது முதல் முறையாக டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டியில் இருப்பது போல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த வாரம் ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி அமெரிக்காவிற்கு வார்னிங் செய்தார். அதில் ”தனது தந்தையும், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும். கண்டிப்பாக பழிவாங்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர். இது நிறைவேற்றப்படும். உயர்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை யார் யார் என்னுடைய தந்தையின்மரணத்திற்கு காரணமாகவர்களாக இருந்தார்களோ அவர்கள் இனி நிம்மதியாக தூங்க முடியாது. அவர்கள் விரைவில் கல்லறைக்கு செல்வார்கள்” என்று மிரட்டி இருந்தார்.

இதற்கிடையே தான் டிரம்ப் மற்றும் அவரது மொத்த குடும்பமும் சவப்பெட்டியில் இருப்பது போல் வெளியாகி உள்ள பேனர் பலரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளது. அதுமட்டுமின்றி ஈரானின் இந்த செயல் அமெரிக்காவை டென்ஷனாக்கி உள்ளது. இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *