இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் நிறுவனமான Meta, டீன் ஏஜ் பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்க புதிய AI அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனிமேல், டீன் ஏஜ் குழந்தைகள் Meta AI-யுடன் பேசும்போது தற்கொலை அல்லது சுய காயப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருப்பதுபோல தகவல்கள் தெரியவந்தால், பெற்றோருக்கு உடனடியாக அலர்ட் அனுப்பப்படும்.
ஏற்கெனவே இப்படிப்பட்ட உரையாடல்கள் நடந்தால், Meta AI உதவி எண்களைப் பரிந்துரைப்பதோடு, பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் பேசவும் அறிவுறுத்தி வருகிறது.
தற்போது அதற்கு அடுத்த கட்டமாக, பெற்றோர்களும் உடனடியாக தகவல் பெறும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அலர்ட் வசதி தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் Instagram Parental Supervision பயன்படுத்தும் பெற்றோருக்கு செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் விரிவுபடுத்த Meta திட்டமிட்டுள்ளது.