‘டெலிகிராம்’ செயலிக்கு திடீர் தடை: இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு! – Kumudam

Spread the love

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த மறுதேர்வில் எவ்வித குளறுபடிகளும் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வுக்கு முன்பாக, டெலிகிராம் செயலி மூலமாகவே வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் டெலிகிராம் செயலியில் மாற்றப்பட்டதும் (Edit) தெரியவந்தது. டெலிகிராம் செயலியின் இந்தத் தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69A-வின்கீழ் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நிறைவடையும் ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அதன் பிறகு பயனர்கள் தாங்கள் ஏற்கனவே அனுப்பிய செய்திகளைத் திருத்தும் வசதியை (Message-editing feature) வரும் ஜூன் 30, 2026 வரை முடக்கி வைக்குமாறும் டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சகம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *