சுமார் 7 கிலோமீட்டர் தூரம் ஓடும் பேருந்திலேயே இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. பின்னர், அந்தப் பெண்ணை நாங்லோய் பகுதியில் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.
அதிகாலை 4.45 மணியளவில் நாங்லோய் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் இந்த வழக்கு ராணி பாக் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
தொடர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் உமேஷ் மற்றும் அவரது உதவியாளர் ராமேந்திரா ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் நாங்லோய் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காகச் சென்றபோது இக்குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தற்போது இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையும், மத்திய அரசும் மௌனம் காப்பதாக ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நிர்பயா சம்பவத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு கறை. டெல்லி அரசு முடங்கியிருக்கிறாதூ.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.