‘டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!’- அபிஜித் தீப்கே | Ready To Go To Jail CJP’s Abhijeet Dipke Ahead Of Protest In Delhi

Spread the love

இந்நிலையில் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி மற்றும் மும்பையில் “லேரா தோ திரங்கா’ (தேசியக் கொடியை ஏந்துவோம்) என்ற போராட்டத்தை சிஜேபி இன்று நடத்த இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அபிஜித் தீப்கே, ” ஞானேஷ் குமார், நரேந்திர மோடிக்கு என்ன கொடுக்கிறார்? ரயில், மெட்ரோ உள்ளிட்ட சேவைகளை நிறுத்தி டெல்லியை முடக்கிவிட்டீர்கள். அனைத்து பாதுகாப்புப் படையையும் டெல்லியில் குவித்து இந்தியா-பாகிஸ்தான் எல்லை போல் டெல்லியை மாற்றிவிட்டீர்கள்.

அபிஜித் தீப்கே

அபிஜித் தீப்கே

இந்தப் போராட்டத்திற்கு முன்னதாக, டெல்லி காவல்துறை தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும். உளவுத்துறை அதிகாரிகள் தன்னைக் கண்காணித்து வருகின்றனர். எண்களற்ற வாகனங்கள் தன் பின்னால் வருகிறது. நாட்டில் தேசியக் கொடியை ஏந்துவதற்காக சிறை செல்ல நேரிட்டாலும் அதற்குத் தான் தயாராகவே இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *