டெல்லி செல்லும் உர்வில் படேல்.. சிஎஸ்கே வரும் அஷுதோஷ் சர்மா? சென்னை அணியின் பலே திட்டம்! | CSK: CSK starts to make another deal with Delhi Capitals for Urvil Patel and Ashuthosh sharma trade

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: சிஎஸ்கே அணி ஒரே நேரத்தில் பல்வேறு டிராட் ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பை அணியிடம் ஹர்திக் பாண்டியா மட்டுமல்லாமல், டெல்லி அணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டெல்லி அணியின் அஷுதோஷ் சர்மாவை வாங்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

கடந்த 3 ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் சிஎஸ்கே அணி மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. இளம் வீரர்களுடன் கொஞ்சம் அனுபவ வீரர்களையும் கைப்பற்ற பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.

CSK

ஏற்கனவே மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலமாக வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் சிவம் துபே மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோரை கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவை கொண்டு வர தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட இந்த டீல் முடியும் தருவாயில் இருக்கிறது.

இருப்பினும் டெல்லி மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளும் ஹர்திக் பாண்டியாவை வாங்க தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் மும்பை அணி எதிர்பார்க்கும் வீரர்கள் அந்த அணிகளிடம் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியே ரேஸில் முந்தி இருக்கிறது. விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஹர்திக் பாண்டியா மட்டுமல்லாமல் வேறு சில வீரர்களையும் வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. அந்தப் பட்டியலில் டெல்லி அணியின் அஷுதோஷ் சர்மா முக்கிய வீரராக இருந்து வருகிறார். டெல்லி அணியால் அஷுதோஷ் சர்மாவுக்கு போதுமான வாய்ப்புகளை கொடுக்க முடியவில்லை.

அவரும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் அணிக்காக விளையாட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். சிஎஸ்கே அணியும் ஃபினிஷிங் ரோலில் சில வீரர்களை கைப்பற்ற ஆர்வமாக உள்ளது. இதனால் உர்வில் படேலை கொடுத்துவிட்டு அவருக்கு பதிலாக அஷுதோஷ் சர்மாவை வாங்க முடிவு செய்து பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.

உர்வில் படேல் அல்லது ராகுல் சஹர் இருவரில் யாரை வேண்டுமானாலும் டெல்லி அணி நிர்வாகம் தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஆஃபர் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் டெல்லி அணி இதுவரை எந்த முடிவையும் கூறவில்லை. இங்கிலாந்தில் நடக்கும் ஒன் டே கப் தொடரில் அஷுதோஷ் சர்மா ஆல் ரவுண்டராக கலக்கி வருவதால், டெல்லி அணி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *