டெல்லி: `ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்குத் தடை’ – மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்! | The Central Government has removed Delhi’s Jantar Mantar from the list of designated protest sites!

Spread the love

டெல்லியில் இதுவரை முதன்மைப் போராட்டக் களமாக இருந்த மத்திய டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி இனி போராட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படாது என
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. SIR விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக “இந்தியா’ கூட்டணி மற்றும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) ஆகியவை மத்திய டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில். “ பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர், போராட்ட இடப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராாி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியின் சிபிடி மைதானம் ஆகியவை புதிய போராட்டக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த புதிய 3 இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) தனியாக வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *