சென்னையில் அடுத்தடுத்து திறக்கப்படும் பிரம்மாண்ட மால்கள்….எங்கெல்லாம் தெரியுமா? – Kumudam

Spread the love

பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் பெயர் பெற்ற சென்னை மாநகரம். தற்போது மாபெரும் சில்லறை வர்த்தகப் புரட்சிக்குத் தயாராகி வருகிறது. நகரின் உள்கட்டமைப்பு, குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவரும் நிலையில், உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் கேளிக்கை அனுபவங்களை விரைவில் வழங்கப் புதிய பிரம்மாண்ட மால்கள் நகர் முழுவதும் தயார் நிலையில் அணிவகுத்து நிற்கின்றன.

குறிப்பாக, தென் சென்னை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் இந்தப் புதிய வர்த்தக மையங்கள் வருகின்றன. இந்தப் புதிய வர்த்தக மையங்கள் அதிக அளவில் உருவாகி வருகின்றன.

இந்த புதிய மால்கள் வெறும் கடைகளின் தொகுப்பு மட்டுமல்ல. அவை நவீன மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் மையங்களாகும். தலைசிறந்த உணவகங்கள், சர்வதேச பிராண்டுகள். மற்றும் நவீன பொழுது போக்கு அம்சங்களை ஒரே கூரையின் கீழ் இவை வழங்கவுள்ளன. அனைத்து மால்களும் சிறந்த போக்குவரத்து இணைப்புகள் உள்ள பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளதால், மக்களின் அணுகுமுறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் சென்னையின் சில்லறை வர்த்தக நிலப்பரப்பு அடுத்த தலைமுறைக்கான பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. இந்த ஷாப்பிங் மால்கள் அடுத்த 6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்துக்குள்ளாக மக்கள் பயன்பட்டிருக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பொருளாதார வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறை என வளரும் சென்னையின் புதிய அடையாளமாக இந்த மால்கள் திகழும் என்பதில் ஐயமில்லை. உலகளாவிய ஷாப்பிங் அனுபவங்களை வரவேற்க சென்னை தயாராகிவிட்டது.

தென் சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட ஐடி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் சர்வதேச நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சாஸ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடங்கும் தென் சென்னை தான் சென்னையின் முதன் மையான ஐ.டி மையமாகத் திகழ்கிறது இது சென்னையின் ஐடி எக்ஸ்பிரஸ்வே என்றும் அழைக்கப்படுகிறது.

தென் சென்னை மற்றும் ஓ.எம்.ஆர். ஐ.டி.காரிடார் பகுதிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான மென்பொருள் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் மாத ஊதியம் சராசரியாக ரூ.30,000 முதல் ரூ லட்சம்வரை உள்ளது. இவர்களை மையப்படுத்தி இந்தப் புதிய மால்கள் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய சிறப்பம்சங்கள்

  • அண்ணா நகர் மால் ஆஃப் மெட்ராஸ்: 12 லட்சம் சதுர அடி, 300+ கடைகள், 9-திரை மல்டிபிளக்ஸ்
  • பெருங்குடி ஓஎம்ஆர் சாலை: போரம் ஒன், சென்னையின் மிகப்பெரிய மால்களில் ஒன்று, 10+ லட்சம் சதுரஅடி
  • போரூர் ஓரியன் மால்: பிரீமியம் ஷாப்பிங் & சிறந்த போக்குவரத்து இணைப்பு
  • சென்னை ரேடியல் சாலை; எம்பஸி மால், ஐ.டி, காரிடாரில் அமையும் புதிய கேளிக்கை மையம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *