டெல்லி பிரதிநிதி நியமனம்: தமிழ்நாடு அரசிடம் கனிமொழி எழுப்பிய 2 கேள்விகள்|Kanimozhi Fires Two Sharp Questions Over TN’s Delhi Appointment

Spread the love

ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது, தவெக அரசு. இதையொட்டி, தமிழ்நாடு அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.

1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?

2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்னைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *