பாரதிராஜா – பாக்யராஜ்: தமிழ் சினிமாவின் மறக்க முடியாத குரு-சிஷ்யர் பயணம்|Just 17 Days Apart: Tamil Cinema Loses Guru and Disciple

Spread the love

தமிழ் திரையுலகில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விரல்களைப் பிடித்து தான் தனது பயணத்தைத் தொடங்கினார் பாக்யராஜ்.

ஆம்… 1977-ம் ஆண்டு வெளிவந்த “16 வயதினிலே‘ திரைப்படம் தான் பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் முதல் திரைப்படம். ஆனால் என்ன… பாரதிராஜா அந்தத் திரைப்படத்தின் இயக்குநர்… அதில் பாக்யராஜ் உதவி இயக்குநர்.

16 வயதினிலேயில் பாக்யராஜ் ஒரு கேமியோ ரோல் கூட செய்திருக்கிறார்.

அதன் பிறகு, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் திரைப்படங்களிலும் இவர்களது இயக்குநர் – உதவி இயக்குநர் காம்போ தொடர்ந்திருக்கிறது.

16 வயதினிலே

16 வயதினிலே

பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்‘ படத்தின் திரைக்கதை எழுத்தாளர் பாக்யராஜ் தான்.

அதன் பிறகு, 1979-ம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்‘ திரைப்படம் மூலம் பாக்யராஜ் தமிழ் திரையுலகில் இயக்குநராக என்ட்ரி கொடுத்து, வெற்றி நடை போட தொடங்கினார். கூடவே, நடிகராகவும் கலக்கி வந்தார்.

இயக்குநர், நடிகர் என வலம் வந்துகொண்டிருந்த நேரத்திலும், 1985-ம் ஆண்டு பாரதிராஜா – பாக்யராஜ் காம்போ ஒன்று சேர்ந்தது. அந்த ஆண்டு வெளியான ‘ஒரு கைதியின் டைரி‘ திரைப்படத்தின் இயக்குநர் பாரதிராஜா… திரைக்கதை எழுத்தாளர் பாக்யராஜ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *