டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" – துருவ் ராட்டி

Spread the love

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனச் சி.ஜே.பி-யினர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் சி.ஜே.பி-யினரையும் மாணவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

துருவ் ராட்டி | Dhruv Rathee
துருவ் ராட்டி | Dhruv Rathee

இந்தப் போராட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகக் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் துருவ் ரதி, நேற்று நள்ளிரவுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியில் அவர், “எனது வீட்டில் நேற்று காலை 7 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்தபோது, சீருடை அணியாத சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் என் அறைக்குள் வந்தார்கள்.

அவர்கள் யார் என்று கேட்பதற்குள் என்னைத் தரதரவென இழுத்துச் சென்றார்கள். என்னைச் செருப்புகூட அணிய அனுமதிக்காமல் கீழே அழைத்துச் சென்று ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

என்னை எந்தச் சட்ட அடிப்படையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பதையும் அவர்கள் சொல்லவில்லை. எனது வழக்கறிஞரைத் தொடர்புகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது.

என் பெற்றோரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது சட்டப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டதோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதோ அல்ல.

இது அப்பட்டமான கடத்தல். நேற்று நள்ளிரவில் நான் விடுவிக்கப்பட்டாலும், என் வீட்டைச் சுற்றி இன்னும் சிலர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பது போல் இருக்கிறது.

ஜனநாயக வழியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுபவர்களையும், எதிர்ப்புக் குரல்களையும் ஒடுக்குவதற்காகவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இது ஜனநாயக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *