தருமபுரி: ‘கருவில் உள்ளது ஆணா? பெண்ணா?’ – வீட்டிலேயே சட்டவிரோத ஸ்கேன் செண்டர்; இருவர் கைது \ Dharmapuri: ‘Is the fetus male or female?’ – Illegal ultrasound center run from a home; two arrested.

Spread the love

அதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நேற்று மதியம் பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது இவர்களைப் பார்த்ததும் கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். வீட்டினுள் கருவிலுள்ள குழந்தையின் பாலினம் கண்டறியும் கருவி இருப்பதை மருத்துவக் குழுவினர் கைப்பற்றினர்.

நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறையினர்

நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறையினர்

பாலினம் கண்டறிந்து சொல்ல ஒரு நபருக்கு 17 ஆயிரம் ரூபாய் வாங்கியதும், கர்ப்பினிகளை வீடு தேடிச் சென்று அழைத்து வர ஏஜெண்டுகள் செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சட்ட விரோத ஸ்கேன் செண்டரை நடத்திய அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு, பென்னாகரம் அருகே ரங்காபுரத்தைச் சேர்ந்த செவிலியர் பரிமளா ஆகியோரை பாலக்கோடு போலீசார் மூலம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இதில், பரிமளா மீது பாலினம் கண்டறிந்தது சொன்னதாக ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டவிரோத ஸ்கேன் செண்டர்கள் மூலம் கருவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *