திங்களன்று, உலகின் மிகவும் பரபரப்பான மையங்களில் ஒன்றான டைம்ஸ் ஸ்கொயரில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கையில் இரண்டு கத்திகளுடன் வந்த குயின்ஸைச் சேர்ந்த பெண் ஒருவர், திடீரென அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். முதலில் 68 வயது முதியவர் ஒருவரைக் குத்திய அவர், அடுத்ததாக எரினைத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த எரின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவல்துறை இந்தத் தாக்குதலை “குறிப்பிட்ட காரணமில்லாத, தூண்டுதலற்ற தாக்குதல்” என்று விவரித்துள்ளது. தாக்குதல் நடத்திய பெண்ணை போலீஸார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.

யார் இந்த பெண்?
மூன்று குழந்தைகளின் தாயான அப்பெண், பல ஆண்டுகளாக மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் தெரிவித்துள்ளார். 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்காக அவர் மீது காவல்துறையிடம் புகார்கள் வந்துள்ளன, ஆனால் நியூயார்க்கில் அவர் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை. அப்பெண்ணின் சகோதரர் பேட்ரிக் பெரால்டா கூறுகையில், “அவளுக்குப் பல தசாப்தங்களாக மனநலப் பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவள் ஒருபோதும் வன்முறையாளராக இருந்ததில்லை. கடந்த சில ஆண்டுகளாக மருந்துகள் எடுத்துக்கொண்டு, ஒரு சட்ட அலுவலகத்தில் பகுதி நேர வேலை பார்த்து, நன்றாகவே இருந்தார்” என்றார். இந்தச் சம்பவம் ஏன் நடந்தது என்பதை எங்களால் விளக்க முடியவில்லை என்று கூறும் அவர், பியாசென்டியின் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றி வளைத்தபோது, அவர் கத்திகளைக் கீழே போட மறுத்து, “உங்களைக் கொல்வதே மேல்” என்று அதிகாரிகளை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறியுள்ளார். அதிகாரிகள் அவரை முதலில் அதிர்ச்சி துப்பாக்கி (Taser) மூலம் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அது பலனளிக்காததால், அவர் அதிகாரிகளை நோக்கிப் பாய்ந்தபோது, இரண்டு அதிகாரிகள் அவரைச் சுட்டுக் கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகின் மிக அதிக பாதுகாப்புள்ள, காவல்துறை தலைமையகத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள டைம்ஸ் ஸ்கொயரில், கடந்த மே மாதமும் இதேபோன்ற ஒரு கத்திக்குத்து மரணம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.