“மூன்று மாதங்களில் 3,700 மேலான டிரேட்கள்’ – அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதலீட்டு தகவல்கள் வெளியாகி உள்ளன.
2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், ட்ரம்ப் 3,700-க்கும் அதிகமான டிரேட்களை செய்துள்ளார். இது ஒரு பிசினஸ் மேன் செய்திருந்தால் ஆச்சர்யமாகவோ, அதிர்ச்சியாகவோ இருந்திருக்காது.
ஆனால், பிசினஸ்மேன் கம் அமெரிக்க அதிபர் செய்தது தான் அமெரிக்காவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
மூன்று மாதங்களில் 3,700-க்கும் மேற்பட்ட டிரேட்கள் என்றால், ஒரு நாளைக்கு 40-க்கும் அதிகமான டிரேட்கள். இந்த அனைத்து டிரேட்களிலும் மொத்தமாக மில்லியன் டாலர் கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளது.
ட்ரம்ப் முதலீடு செய்துள்ள பெரிய நிறுவனங்களின் பட்டியல்…
Nvidia, மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், போயிங், அமேசான், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், நெட்ஃபிளிக்ஸ், இன்டெல் மற்றும் இன்னும் பல நிறுவனங்கள்.
இந்த முதலீடுகள் தான் ட்ரம்பிற்கு சர்ச்சையை அழைத்து வந்துள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆவார். அவர் எடுக்கும் முடிவுகள் இந்த நிறுவனங்களில் பிரதிபலிக்கும். மேலும், அவர் அந்த நிறுவனங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பவர்.
அதனால், இந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகளின் போக்கு அனைத்தும் ட்ரம்பிற்கு அத்துப்படியாக இருக்கும். அதை வைத்து அவர் இந்த டிரேட்களை செய்து லாபம் பார்த்திருப்பார் என்கிற சந்தேகம் எட்டிப்பார்க்கிறது.