‘தகரக் கதவுகள்… பூட்டு இல்லை… ஃபிரிஸர் இல்லை’ – இடியும் நிலையில் அரசு மருத்துவமனை பிணவறை கட்டிடம் | Aruppukottai Government Hospital mortuary building on the verge of collapse

Spread the love

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல், திருச்சுழி, காரியாப்பட்டி, கோவிலாங்குளம், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

இடியும் நிலையில் பிணவறை

இடியும் நிலையில் பிணவறை

அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை விபத்தில் இறப்பவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், விஷக்கடி, இடி மின்னல் மூலம் இறப்பவர்கள், கொலைச் சம்பவத்தால் இறப்பவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காகப் பாதுகாப்பாக வைப்பார்கள்.

அரசு மருத்துவமனையாக மட்டுமே இயங்கி வந்த இந்த மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ரூ. 31 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *