தமிழின வளர்ச்சி, தமிழ்நாடு மேம்பாடு, பொதுவாழ்வு சாதனை ஆகியவற்றில் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் இந்த விருது சங்கரய்யா, நல்லகண்ணு, குமரி அனந்தன், வீரமணி, காதர் மொய்தீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தகைசால் தமிழர் விருதுடன் பாராட்டுச் சான்றிதழும் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை செய்யாறு வட்டத்தைச் சேர்ந்தவர் எம்.கிருஷ்ணசாமி.
இவர் ஆரம்பக் காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். அதன் பின், 2006-2008 என இரு ஆண்டுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்திருக்கிறார்.
1991-ம் ஆண்டு வந்தவாசி மக்களவை தொகுதியில் இருந்தும், 2009-ம் ஆண்டு ஆரணி மக்களவை தொகுதியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.