2025-ம் ஆண்டு சர்வதேச அளவில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸிற்கு கிட்டத்தட்ட 150 சதவிகிதம் வரையில் சென்றது.
எப்போதுமே இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது தான் அதிக ஃபோக்கஸ். வெள்ளியை அவ்வளவாக கவனிக்கமாட்டார்கள்.
கடந்த ஆண்டு, வெள்ளி விலை தங்கத்தைத் தாண்டி வளர்ச்சி காண்பதால், ஒரு கட்டத்தில் வெள்ளி வாங்க ஆரம்பித்தார்கள்… சில்வர் இ.டி.எஃப்பில் முதலீடு செய்ய தொடங்கினார்கள்.
ஆனால், இன்னும் சிலர் வெள்ளி விலை உச்சத்தைத் தொட்ட போது, முதலீடு குறித்து யோசித்தார்கள். அப்போது விலை தாறுமாறாக உயர்ந்திருந்தது.

சரி… சென்ற ஆண்டு போனால் போகட்டும். இந்த ஆண்டு அந்த வாய்ப்பை மிஸ் செய்துவிடாதீர்கள்.
தற்போதும் சர்வதேச சந்தையில் தங்கத்தை விட, வெள்ளியின் விலை நன்கு உயர்ந்து வருகிறது. வெள்ளியுடன் செம்பின் விலை உயர்வையும் கவனிக்க வேண்டும்.
70 டாலர்கள் வரை சென்று வர்த்தகம் ஆகிக்கொண்டிருந்த வெள்ளி, தற்போது 80 – 86 டாலர்கள் அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது.