தங்கம் வாங்கப் போறீங்களா?…மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…! – Kumudam

Spread the love

தங்கம் விலை கடந்த 27 ஆம் தேதி உயர்ந்து வந்த நிலையில் 28,29 ஆகிய தேதிகளில் குறைந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (01.08.2026) தங்கம் விலை சவரனுக்கு ரூ 280 குறைந்து ஒரு சவரன் ரூ 1,05,760 க்கும் , கிராமுக்கு ரூ 35 குறைந்து ஒரு கிராம் ரூ 13,220க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

விடுமுறை தினமான நேற்று (02.08.2026) தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ 1,05,760க்கும் , ஒரு கிராம் ரூ 13,220க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் வார தொடக்கமான இன்று  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 1,06,000க்கும் ,கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,250க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 235க்கும் , ஒரு கிலோ ரூ 2,35,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *