பன்றியின் சிறுநீரகத்தில் உயிர் வாழ்ந்த நபர்; 271 நாள்களுக்குப் பிறகு கிடைத்த மனித சிறுநீரகம்!

Spread the love

அதேசமயம் இந்த சிகிச்சையானது பன்றியின் சிறுநீரகங்கள் மனித சிறுசீரகங்களுக்கு மாற்றாக அமையும் என்று அர்த்தமல்ல. பல தசாப்தங்களாக மனித உடல் பன்றியின் சிறுநீரகங்களை நோயெதிர்ப்பு நிராகரிப்பு, வைரஸ் தொற்று அபாயங்கள் மற்றும் உறுப்பின் ஆயுட்காலம் ஆகிய காரணங்களால் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. எனவே தற்போது நடந்துள்ள இந்த சிகிச்சை மிகவும் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.

ஏன் பன்றியின் சிறுநீரகம்?

மற்ற எத்தனையோ விலங்குகள் இருக்கும்போது பன்றியின் உறுப்புகள் ஆய்வு செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் அவற்றின் அளவு மற்றும் உடலியல் அமைப்பு ஆகியவை மனித மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்பீட்டளவில் பொருத்தமானதாக இருக்கிறது. அதேசமயம் மனித நோயெதிர்ப்பு அமைப்பு இதற்கு தடையாக இருக்கிறது. அது பன்றி உறுப்பை வெளியில் இருந்து வந்த உறுப்பாக கருதி நிராகரிக்கிறது.

இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சிறுநீரகம் 69 மரபணு மாற்றங்களை கொண்டிருக்கிறது. மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி தூண்டப்படுவதற்குக் காரணமான, பன்றியின் மூன்று முக்கிய கிளைக்கன் ஆண்டிஜென்கள் நீக்கப்படுகிறது. பன்றியின் உறுப்பு மனித நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் எளிதாகப் பொருந்திச் செயல்படுவதற்காக ஏழு மனித மரபணுக்குள் உள்ளே செலுத்தப்பட்டன. மேலும், பன்றியிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காகப் பன்றியின் எண்டோஜென்ஸ் ரெட்ரோவைரஸ்கள் முற்றிலுமாக செயலிழக்கச் செய்யப்பட்டன.

இதற்கு முன்பும் மனிதர்களுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சோதிக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக 2024ம் ஆண்டு மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி சிறுநீரகத்தை உயிருள்ள ஒரு மனிதருக்கு பொருத்திப் சாதனை படைத்தது. அந்த நோயாளி, சிறுநீரகத்துடன் சம்மந்தப்படாத இதய கோளாறு காரணமாக பன்றி சிறுநீரகத்துடன் 52 நாட்கள் உயிர் வாழ்ந்து இறந்தார். அவர் உயிரிழந்த அந்த நேரத்திலும் பொருத்தப்பட்ட பன்றி சிறுநீரகம் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *