
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்று இறக்கத்தோடு இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் (19.09.2026) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,040 உயர்ந்து,ஒரு சவரன் ரூ 1,14,280க்கும்,கிராமுக்கு ரூ 130 அதிகரித்து ஒரு கிராம் ரூ 14,285க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி தங்கம் விலையில் மாற்றமில்லாமல் அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,14,280க்கும், ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் வார தொடக்கமான முதல் நாளில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல், அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.