தங்கம் விலை அதிரடி சரிவு: தீபாவளிக்கு முன் சென்னையில் தங்கம் விலை நிலவரம்|Gold Slides Below $4,000: What’s Driving the Price Drop?

Spread the love

தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரம்தான் உள்ளது.

இந்த நேரத்தில் நம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.

இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.310-உம், பவுனுக்கு ரூ.2,480-உம் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,730-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,01,840-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம், ஒரு பவுனுக்கு ரூ.1.24 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை இப்போது ரூ.1.01 லட்சத்திற்குச் சறுக்கியுள்ளது.

சர்வதேச சந்தையில்…

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததே இந்த இறங்குமுகத்துக்குக் காரணம்.

தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 டாலருக்குக் கீழ் சறுக்கி 3,884 டாலர் என வர்த்தகமாகி வருகிறது. வெள்ளி ஒரு அவுன்ஸுக்கு 49 டாலர் என வர்த்தகமாகி வருகிறது.

> அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதல் வருகிற நவம்பர் 3-ம் தேதிக்குப் பின் தொடரும் என்று முன்பு அறிவித்திருந்தார். இப்போது அந்தத் தேதி நெருங்கிவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *