தங்கம் விலை ஏற்றம் குறையுமா? நிபுணர் விளக்கம்|Will Gold Prices Rise Again? Jewellers Explain Latest Trend

Spread the love

“ஓராண்டிற்கு தங்கம் வாங்காதீர்கள்’ என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்த இரண்டு நாள்களில், தங்கம் இறக்குமதி வரி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதம் ஏற்றப்பட்டது.

இறக்குமதி வரி ஏற்றத்திற்கு முன்பு வரை, தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.12 லட்சத்திற்கு விற்பனை ஆகி வந்தது. அதன் பின், பவுனுக்கு ரூ.1.23 லட்சத்திற்கு வந்தது தங்கம் விலை.

ஆனால், கடந்த 13-ம் தேதி, தாறுமாறாக ஏறிய தங்கம் விலை, அதன் பின், இன்று ரூ.1.18 லட்சத்திற்கு வந்து நின்றது.

ஜெயந்திலால் சலானி

ஜெயந்திலால் சலானி

தங்கம் விலையில் ஏற்றம் இருக்குமா என்கிற கேள்வியை தங்க நகை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம்.

“தங்கம் இறக்குமதி வரியால் ஏற்பட்ட விலை உயர்வின் உச்சத்தை தங்கம் தொட்டுவிட்டது. அதனால், இதற்காக இனி தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை இறங்குமுகத்தில் தான் இருக்கிறது. இனி சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் தான், இந்தியாவில் தங்கம் விலை உயரும்.

ஈரான் போர் முடிந்தால் தான் இனி சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயரும்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *