தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் வரலாம்? வரலாற்றில் இல்லாத மாற்றம் வரப்போகிறது | Gold price can come below one lakh? A change unprecedented in history is coming

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: தங்கம் விலை இம்மாத இறுதிக்குள் ஒரு சவரன் ஒரு லட்சத்திற்கும் குறைவாக வாய்ப்புகள் உள்ளதாக இன்ப அதிர்ச்சி தருகிறார்கள் சில பொருளாதார நிபுண்ர்கள் . வெள்ளி விலை அக்டோபர் மாத இறுதிக்குள் ஒரு கிலோ இரண்டு லட்ச ரூபாய்க்கும் குறைவாக சாத்திய கூறுகள் உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடும் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 20-ந்தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்தவரிசையில் நேற்றும் குறைந்திருந்தது.

கடந்த அக்டோபர் 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 390-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 120-க்கும் சென்னையில் விற்பனையானது. ஆனால் நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து சென்னையில் விற்பனையானது. ஒரு பவுனுக்கு ரூ.1,240-ம் அதிரடியாக சரிந்து காணப்பட்டது.

Gold price can come below one lakh A change unprecedented in history is coming

தங்கம் விலை குறைவு

அந்த வகையில் அக்டோபர் 22ம் தேதியான நேற்று ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 235-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 880க்கும் சென்னையில் விற்பனை ஆனது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.335-ம், பவுனுக்கு ரூ.2,680-ம் குறைந்து காணப்பட்டிருந்தது. வெள்ளி விலையும், தங்கத்தை போலவே குறைந்திருந்தே இருந்தது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.1400 குறைந்து, ரூ.1,04,580க்கு விற்பனையாகிறது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.175 குறைந்து, ரூ.13,060க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.225க்கு விற்பனையாகிறது . 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை 4080 ரூபாய் சரிந்திருக்கிறது.

தங்கம் விலை சரிய என்ன காரணம்

வளைகுடா நாடுகளில் போர் சூழல் நிகழ்வுதுதான் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை உலக அளவில் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் பல புள்ளி விவரங்களுடன் கூறுகின்றன. குறிப்பாக உலக அளவில் வெள்ளியை வாங்கி குவிக்கும் சவுதி அரேபியாவில் போர் பதட்டம் காரணமாக உலக அளவில் வெள்ளிக்கான தேவை குறைந்துள்ளது. எனவே வெள்ளி விலையும் இமாலய சரிவை சந்திக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த சில மாதங்களாக இறக்குமதி தங்கத்திற்கான சுங்கவரி உயர்ந்து இருப்பதால் தங்க முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை சற்று குறைத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்து உள்ளார்களாம்.

அத்துடன் இந்த பண்டிகை காலங்களில் கூட தங்கத்தின் தேவை குறைந்துள்ளதால் விலை குறைந்து உள்ளதாம். தங்கத்தின் விலை பண்டிகை காலம் முடிந்த பின்னர் அதாவது 2027 பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கடந்த 2025 ஆண்டு விலையான ஒரு சவரன் 75 ஆயிரம் ரூபாய் என்கிற விலையில் கூட குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் சில பொருளாதார நிபுணர்கள். ஆனால் இது உண்மையா என்று உறுதியாக கூற முடியாது . சர்வதேச அளவில் நிலவரங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் தங்கம் விலை சற்றே குறையலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

தற்போத திருமணம் நிச்சயத்துள்ள பெற்றோர்கள் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் நிம்மதியாக உள்ளனர். உலக அளவில் ஏற்படக்கூடிய போர் பதட்டம், பொருளாதார மந்த நிலை, பண மதிப்பு குறைவு ஆகியவை மேலும் தங்கத்தின் விலையை குறைப்பதற்கான சாத்தியத்தை அதிகமாக்கி வருகிறது என்பது உண்மை தான்.

குறிப்பு: இந்த விவரங்கள் அனைத்து பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கள் தான். ஒன் இந்தியா தமிழின் கருத்தோ அல்லது ஆலோசனையோ அல்ல. பங்கு சந்தை மற்றும் தங்கம் உள்ளிட்ட முதலீட்டு விவகாரங்களில் செபியில் பதிவு செய்த நிபுணர்களை மட்டுமே அணுக வேண்டும். மற்ற முதலீட்டு ஆலோசனைகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *