இதற்கான காரணங்கள் என்ன?
இந்தச் சரிவிற்கு 3 மிக முக்கிய காரணங்களைக் கூறலாம்.
முதலாவது, ஈரான்-அமெரிக்கா போர் ராணுவ ரீதியில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், சரக்குப் போக்குவரத்து மீண்டும் தீவிரமாகப் பாதிக்கப்படலாம். ஆக, பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
இரண்டாவது, இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும்.
மூன்றாவதாக, இந்த உயர்வால் பத்திர வருவாய் அதிகரிக்கலாம். இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தைத் தாண்டி, இந்த மாதிரி வருவாய் தரும் முதலீடுகளுக்குத் தங்களது முதலீடுகளை மாற்றுவார்கள். ஆக, தானாகத் தங்கம் விலை உயரும்.
இப்போதுதான் நல்ல சான்ஸ்!
சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 6.42 சதவிகிதம் சரிந்துள்ளது. ஆக, இந்த வாரத்தில் தங்கச் சந்தையில் அதிக Volatility இருந்தது. இனியும் இருக்கலாம்.
அதனால், தங்கச் சந்தையில் சூப்பரான டிரேடிங் வாய்ப்பு உள்ளது. இதை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவில் தற்போது பண்டிகை சீசன். இந்த விலை குறைவைப் பயன்படுத்தி, தேவையிருந்தால் தங்க நகைக்கூட வாங்கலாம்.