சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,030-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,20,240-க்கும் விற்பனையாகி வருகிறது.
கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சர்வதேச சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,600 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.
> அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வட்டி வருவாய் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது.

> போரின் காரணமாக, கச்சா எண்ணெய் விலையில் நிலையற்றத்தன்மை இருந்து வருகிறது.
> தற்போது ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா.
> உலக வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி குவித்து வருகிறது.
> ஆப்ஷன் டிரேடிங், இ.டி.எஃப் போன்றவற்றிலும் உலக முழுவதும் தற்போது தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்.
> இறுதியாக, பணவீக்கத்திற்கான அச்சம்.
இவற்றால் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. உலக அளவில் நிலவும் தற்போதைய சூழலில், தங்கம் விலை இன்னும் உயரும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.