தங்க நகையா, கோல்டு இ.டி.எஃப்-ஆ? முதலீட்டாளர்கள் தெரிந்துகொGold Gets Cheaper in Chennai: Is It Time to Invest?ள்ள வேண்டியது|

Spread the love

கடந்த ஆண்டு, தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தபோது, தங்கத்தில் முதலீடு செய்யாமல் விட்டுவிட்டோமே என்று ஃபீல் செய்தவர்கள் பலர்.

இன்னும் பலர், தங்கம் விலை உச்சத்தில் இருந்தபோது முதலீடு செய்து, இப்போது விலை சரிவில் சிக்கியுள்ளனர்.

கடைசி நேரத்தில் ஃபீல் செய்யாமல் இருக்கவும், அவசரத்தில் முதலீடு செய்து சறுக்காமல் இருக்கவும், இப்போதே முந்துங்கள்.

தங்க முதலீட்டிற்கு நல்ல நேரம் இது.

ஆம்… பல்வேறு சர்வதேச காரணிகளால் தங்கம் விலை சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் குறைந்துள்ளது. இதனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எஸ்.ஐ.பி முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கோல்டு இ.டி.எஃப்களில் முதலீடு செய்வது நல்லது.

இது சைலண்டாக எந்தச் செய்கூலி, சேதாரம் இல்லாமலும், ஆனால், தொடர்ச்சியான நல்ல முதலீடாக இருக்கும்.

குறைந்த விலையில் முதலீட்டைத் தொடங்கும்போது, இ.டி.எஃப்பில் உங்களுக்கு அதிக யூனிட்டுகளும் கிடைக்கும்.

கோல்டு இ.டி.எஃப்

கோல்டு இ.டி.எஃப்

ஏன் தங்க நகை வாங்கக் கூடாதா என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. அவசரத் தேவை… உடனடித் தேவை என்றால் மட்டும், தங்க நகை வாங்குங்கள்.

எதிர்காலத்தில் தேவைப்படும் என்று இப்போது தங்க நகை வாங்கி வைப்பது அவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு அல்ல.

தங்கச் சீட்டையும் எடுத்துக்கொண்டால், அதிலும் சேதாரம் செய்கூலி எல்லாம் சென்று பெரிய லாபம் இல்லை.

இதனால், கோல்டு இ.டி.எஃப் முதலீட்டைத் தேர்ந்தெடுப்பது நல்ல முடிவு. கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்ய அதிகப் பணம் எல்லாம் தேவையில்லை. ரூ.500 இருந்தால் கூடப் போதும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *