’தஞ்சாவூரு மண்ணெடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்… தமிழ்த் திரையிசைக்கு மேலும் ஒரு சோகம்

Spread the love

பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார், அவருக்கு வயது 75.

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்.

சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் இருந்ததால் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்து இசை கற்றார். அங்கு சிறந்த மாணவர் என்கிற விருதைப் பெற்றார்.

தொடர்ந்து சினிமாவுக்குப் பாட முயற்சி செய்த நிலையில் இவர் பாடிய முதல் படம் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை.

எனினும் மனம் தளராமல் முயற்சியைக் கைவிடவில்லை.

பொறுமையாகப் போராடிய கிருஷ்ணராஜுக்கு 90களில் காலம் கை கொடுத்தது.

 பொற்காலம்
பொற்காலம்

காதல் கோட்டையில் வெள்ளரிக்கா பாடல், பொற்காலம் படத்தில் தஞ்சாவூர் மண்ணெடுத்து ஆகிய பாடல்கள் ஹிட் ஆகின. பொற்காலம் பாடலுக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதும் கிடைத்தது.

அத்துடன் சிங்கப்பூரின் மறைந்த அதிபர் செல்லப்பன் ராமநாதனுக்கு ரொம்பவே பிடித்த பாடலாக அமைந்தது அந்தப் பாடல். அவர் மறைந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் அந்தப் பாடல் இசைக்கப்பட்டது.

தன்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டின் ஏதோவொரு ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தப் பாட்டில் அந்த ஊர் இருக்கலாமென நினைத்ததால், அவருக்குப் பிடித்துப் போனதாகச் சொல்லப்பட்டது.

சமீபத்தில் மறைந்த தேவாவின் இசையில் கிருஷ்ணராஜ் பாடிய பாடல்தான் அது. தேவாவின் இசையில் பல பாடல்களைப் பாடியிருக்கிறார் இவர்.

இத்தகைய புகழைப் பெற்ற கிருஷ்ணராஜ் தற்போது சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *