தஞ்சாவூர்: ”குடும்பபே சின்னாபின்னமாகிடும்” – புகார் அளித்தவரை மிரட்டிய மருத்துவமனை உரிமையாளர் கைது \ Thanjavur: Hospital owner arrested for threatening complainant, warning that their “family would be ruined.”

Spread the love

இதையடுத்து A to Z மருத்துவமனையின் பங்குதாரர்களின் ஒருவர் எனச் சொல்லப்பட்டும் பாஸ்கரனின் அண்ணன் மகன் சரவணன், திருமாறனுக்கு போன் செய்து, “யாரைக் கேட்டு பெட்டிஷன் போட்டீங்க? உங்க மீது கேஸ் போட்டால் ரொம்ப சிரமப்பட்டு போயிடுவீங்க. மெடிக்கல் ஆக்டில் கேஸ் கொடுத்தால் பத்து வருடம் வெளியே வர முடியாது.

குடும்பமே சின்னாபின்னமாகிடும். இதுமாதிரி செஞ்சவங்க என் காலில் விழுந்து கெஞ்சுகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆகியிருக்கு தெரியுமா?

அதிகாரிகள் சர்டிபிகேட் கொடுத்தனர். நல்ல விஷயங்களுக்குத் துணை போங்க. உங்களைப் பத்தி விஏஓ நல்ல விதமா சொல்றார். நீங்க இதில் ஈடுபடாதீர்கள். அதிகாரிகள் உங்க மீது கோபமா இருக்காங்க. ஆணையர் கூட புடிச்சி உள்ளே போட்டுடுவோம் என்று சொன்னார்” எனத் திருமாறனை மிரட்டியிருக்கிறார்.

இதேபோல் பாஸ்கரனும் போன் செய்து, ”லைசென்ஸ் இல்லை, ஆபரேஷன் தியேட்டட் இல்லைனு பெட்டிஷன் போட்டிருக்கே. உனக்கு ஆஸ்பிட்டல பத்தி தெரியுமா? பெட்டிஷன் போட்டா பெரிய ஆளா. பிடிச்சி லாடம் கட்டச் சொல்லிடுவேன். ரொம்ப மோசமா போயிடும்.

நீ யார்னு தெரியும். உன்னை மாதிரி புறம்போக்கு இல்லை நான். நீ எனக்கு தகுதியான ஆள் கிடையாது. தொலைச்சுபுடுவேன்” என்று தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டியிருக்கிறார்.

இது தொடர்பான ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை உண்டாக்கியுள்ளன.

இந்நிலையில் ஆர்.எம்.பாஸ்கரன் சாதி ரீதியாக என்னைத் திட்டியதாக மத்திய மண்டல ஐ.ஜியிடம் திருமாறன் புகார் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து மத்திய மண்டல ஐ.ஜி உத்தரவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் பாஸ்கரன் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பாஸ்கரனைக் கைது செய்தனர்.

இந்நிலையில் உடல் நலக்குறைபாடு காரணமாக பாஸ்கரன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *