தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது.
இந்தக் கிடங்கில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நெல் சேமிப்புக் கிடங்கில் இன்று வழக்கம் போல் தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மனைவி சின்னப்பொண்ணு(51), சகுந்தலா ஆகியோரும் தற்காலிக ஊழியராகப் பணிபுரிகின்றனர்.
இவர்களும் நெல் மூட்டைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் திடீரென் சரிந்து விழுந்தன. பணி செய்து கொண்டிருந்த சின்னப்பொண்ணு, சகுந்தலா மீது நெல் மூட்டைகள் விழுந்துள்ளன.