சாதனைகளும் வயது தடையில்லை:
கொஞ்சம் நில்லுங்க பாஸ்..எனது அதிரடி ஆட்டத்தை பாருங்க என்று அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் சூர்யவன்ஷி. கிரிக்கெட்டில் இந்தியா ஏ அணியில் தற்போது விளையாடி இருக்கிறார். இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி 29 பந்துகளில் 94 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் கேப் வெர்டே நாட்டின் கோல்கீப்பர் 40 வயதான வோ சின்ஹா 7 கோல்களை தடுத்து…போட்டியை டிரா செய்து தடுத்தாட்கொண்டவரானார். ஒருவர் மிக மிக இளம் வயது. இன்னொருவர் நடுத்தர வயது. சாதனை புரிய வயது தடையில்லை இருவரும் கவனத்துக்குரியவர்களானார்கள்.
உயிர்க்கு ஆபத்தை விளைவித்த சம்பவங்கள் மனதை விட்டு அகலாமல் ஒரு அழுத்தத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். அதிலும் நின்று நிதானித்து அதிலிருந்து வெளிவந்து சாதனை படைத்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் பிழைத்த மாணவி ஜெனிபர் அவர்கள் இன்று TNPSC GROUP 1 தேர்வில் வெற்றி பெற்று துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
இயற்கையின் அழகியல்:
‘பனி பொழியும் மாலையில் காட்டில் ஒரு நிறுத்தம்’ (STOPPING BY WOODS ON A SNOWY EVENING) என்ற ஆங்கிலக் கவிதையில் ‘ராபர்ட் ஃப்ராஸ்ட்’ காட்டில் பனி பொழிவதை பார்க்க நிற்கும் ஒரு பயணியின் இயற்கை மற்றும் சமூகப் பார்வையை சொல்கிறார். அதில் வரும்
“THE WOODS ARE LOVELY DARK AND DEEP…BUT I HAVE PROMISES TO KEEP..AND MILES TO GO BEFORE I SLEEP..
என்ற வரிகளை பல இடங்களில் பயன்படுத்துவார்கள். இயற்கையின் அழகை ரசிக்க கொடைக்கானல் ஊட்டி, மூணார் செல்கிறோம்… எதற்காக…மனம் லேசாக மாற வேண்டும் என்பதற்காகவே.
‘கொஞ்சம் நில்லுங்க’ – பார்க்க சாதாரண பேச்சு வழக்கில் பயன்படுத்தும் வார்த்தைகள் போல் இருக்கும். அதற்குள் இன்னொரு உலகம் இருக்கிறது. ‘கொஞ்சம் நில்லுங்க…அதைப் பாருங்க..ஒவ்வொன்றிலும் நமக்கான ஒன்று இருக்கும்.