பாபநாசம் தொகுதியை கைப்பற்றத்தான் கும்பகோணத்தில் இந்த மாநாட்டை நடத்தியதாக சொல்லப்பட்டது. அதே போல் திமுக கூட்டணியில் பாபநாசம் தொகுதி ஒதுக்கப்பட்டு ஏ.எம்.ஷாஜஹான் வேட்பாளர் ஆனார். தொடர்ந்து கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுவதாக திமுக-வுக்குள் சலசலப்பு கிளம்பியதைத் தொடர்ந்து திமுக தலைமை, கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்தது. இதையடுத்து, ஏணியில் நிற்காமல் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் அப்போது தான் ஷாஜஹான் எளிதாக வெற்றி பெறலாம் எனவும் லோக்கல் திமுக நிர்வாகிகள் போர்கொடி தூக்க பஞ்சாயத்து ஸ்டாலின் வரை சென்றது.
அப்போது சில நிர்வாகிகளிடம் ஸ்டாலினே நேரடியாக, தேசிய கட்சியான அவர்களை நம் சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் நம் கட்சி நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் பேசி பிரச்னைக்கு எண்ட் கார்டு போட்டார். தொகுதி சாதகமாக இல்லை என ரிப்போர்ட் சென்ற நிலையில் ஒரு குழுவை இறக்கி விட்டு வெற்றிக்கான வேலையை செய்ய வைத்தார். நுணுக்கமான சில தேர்தல் பணிகளால் ஏ.எம். ஷாஜஹான் வெற்றி பெற்றார். தற்போது அவர் அமைச்சராகவும் ஆகிவிட்டார். இவரது வெற்றிக்கான காரணி திமுக என்றால் மிகையாகது. அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஷாஜஹான் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சிறப்பான மக்கள் பணியை மேற்கொண்டு தொகுதியை வளர்ச்சியடையச் செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்றனர்.