தஞ்சை நிசும்பசூதனி : சோழ மன்னர்கள் வழிபட்ட இந்த அம்மனை வணங்கினால் இனி வாழ்வில் எப்போதும் வெற்றிதான்! | tanjore nisumbasuthani temple

Spread the love

தஞ்சை நிசும்பசூதனி ஆலயத்தில் தேவி, கருவறையில் வடக்கு நோக்கிக் கம்பீரமான திருக்கோலத்தில் வீற்றிருக்கிறாள். இது, ‘ராகுகால கோயில்’ என்று தற்போது அழைப்படுகிறது. சுமார் ஏழு அடி உயரத்தில், எலும்புகள் வெளியே தோன்றும் அளவுக்கு மெல்லிய தேகம் கொண்டு, பாம்புகளைக் கச்சையாக அணிந்து, எட்டுத் திருக்கரங்கள், தீச்சுவாலையாகத் திருமுடி. நிசும்பனின் தலையைக் கொய்து அதன்மீது அழுத்திய திருவடி, தெற்றுப் பற்கள், மண்டையோட்டு மாலைகள், அழிக்கும் திரிசூலம் என ஆக்ரோஷ வடிவில் காட்சியளிக்கிறாள் அன்னை.

தஞ்சை நிசும்பசூதனி

தஞ்சை நிசும்பசூதனி

சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியைக் கரங்களில் தாங்கி, தலையைச் சற்று சாய்த்தவாறு காட்சியளிக்கும் அன்னை அருளை வழங்குவதிலும் சிறப்பானவள் என்கிறார்கள். இங்கே வீழ்ந்து இருக்கும் சண்டன்- முண்டன் மற்றும் சும்ப – நிசும்பர்கள் சோம்பல், ஆணவம், பொய், தீய பழக்கங்கள் எனும் நான்கு குணங்களின் குறியீடுகளே என்கிறார்கள் பக்தர்கள். இவளை தரிசித்தால் இந்த நான்கு தீமையும் வீழ்ந்துவிடும். அஞ்சும் வகையில் அன்னை கோர ரூபம் கொண்டாலும் பக்தர்களுக்கு அருள்புரியும் கருணைக்கடலாய்த் திகழ்கிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.

வெள்ளி, செவ்வாய், ஞாயிறு, அமாவாசை, அஷ்டமி, நவமி, பௌர்ணமி, ராகுகால வேளைகளில் இவளை தரிசிக்க வரும் கூட்டமும் அதிகம்.

Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்

இணைய க்ளிக் செய்க… https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *