தஞ்சை: ‘நேருவின் உறவினர் டெண்டரை நடத்த விடாமல் தடுக்கிறாரா?’ – பேருந்து நிலைய கழிப்பறை சர்ச்சை | Thanjavur: ‘Is a relative of Nehru preventing the tender process?’ – Bus stand restroom controversy.

Spread the love

அப்போது பணியில் இருந்த ஆணையர் இரண்டு முறை டெண்டர் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிட்டு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் இரண்டு முறையும் திமுக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்து டெண்டரை நடத்த விடாமல் கேன்சல் செய்து விட்டனர். அதன் பின்னர், டெண்டர் எடுத்திருந்த திமுக பிரமுகர்களுக்கு நீட்டிப்பு செய்து கொடுக்கப்பட்டது.

அதுவும் கடந்த 30ம் தேதியுடன் முடிந்து விட்டது. மாநகராட்சி நிர்வாகம் தற்போது அதற்கான டெண்டரை வைத்தால் அதை எடுப்பதற்குப் பலர் தயாராக உள்ளனர். இதனால் மாநகாட்சிக்குக் கூடுதலாக வருவாய் கிடைக்கும்.

தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகராட்சி

டெண்டர் நடத்தவில்லை என்றால் மாநகராட்சியே கட்டுப்பாட்டில் எடுத்து கழிப்பறையை நிர்வகிக்க வேண்டும் இதுதான் விதி. தவெக ஆட்சி அமைத்து 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. முதல்வராக ஜோசப் விஜய் இருந்தும் பல மாவட்டங்களில் அரசு சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் மூலமாக திமுக-வினர்தான் கோலோச்சி வருகின்றனர். இந்தக் கழிப்பறை டெண்டரை கூட திமுக முக்கியஸ்தர்கள் நடத்தவிடாமல் மீண்டும் நீடிப்பு செய்து ஆர்டர் வாங்கி அதன் மூலம் ஆதாயம் அடைந்து வருகின்றனர்.

முன்னாள் திமுக அமைச்சர் நேருவின் உறவினர் ஒருவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவர் மூலம் திமுக-வினர் டெண்டரை நடத்த விடாமல் செய்து விட்டனர். ஆட்சிதான் மாறியிருக்கிறது காட்சிகள் மாறவில்லை என்பது போல் தவெக ஆட்சியிலும் திமுக-வினர் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது.

தவெக-வினர் இதனைக் கண்டு கொள்ளவில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளும் திமுக-வினர் சொல்படியே நடக்கிறார்கள். தவெக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர். மாநகராட்சி தரப்பிலோ, இதுவரை புதிய டெண்டர் நடத்துவதற்கான அறிவிப்பு வராததால் ஏற்கனவே நடத்தியவர்களுக்கு நீடிப்பு செய்யப்பட்டிருக்கிறது” என்று சொல்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *