தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில் : துக்கங்கள் தீர்ப்பாள் அஷ்டபுஜ துர்கை! | history of tanjore district ammankudi durgai temple

Spread the love

பெரும் படையெடுப்போ அல்லது வேறு முக்கிய காரியங்களோ… எதுவாயினும் முதலில் இந்த அம்மனை வணங்கியபிறகே காரியத்தில் இறங்குவாராம் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். அதனால் அவருக்கும் சோழதேசத்துக்கும் வெற்றிமேல் வெற்றி கிடைத்தது என்கிறார்கள். அவர் இந்த ஆலயத்தில் கருங்கல் திருப்பணிகளை மேற்கொண்டதுடன், கோயிலுக்கு ஏராளமான நிவந்தங்களையும் அளித்து வழிபட்டிருக்கிறாராம். ஸ்காந்த புராணத்தின் 66-வது அத்தியாயத்தில், இந்தத் தலத்தின் சிறப்புகள் பற்றிய குறிப்புகள் உண்டு என்கிறார்கள்.

அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில் விக்னஹர விநாயகர்

அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில் விக்னஹர விநாயகர்

அற்புத சாந்நித்தியத்துடன் திகழ்கிறது அம்மன்குடி ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவர் அருள்மிகு கயிலாசநாதர், கிழக்குநோக்கி அருள, பார்வதிதேவி தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள். பெரும்பாலான சிவாலயங்களில் கோஷ்டத்தில் வடக்கு நோக்கி அருளும் துர்காம்பிகை இங்கே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கருவறையில்… உக்கிரத்துடன் ஒரு துர்கையும், சாந்தமும் கனிவும் பொங்க இன்னொரு துர்கையும் தரிசனம் தருவது சிறப்பு.

ராகு பகவானுக்கு அதிதேவதை ஶ்ரீதுர்கை. எனவே, ராகுகாலத்தில் அம்மன்குடி ஆலயத்துக்குச் சென்று, துர்கையை வணங்கி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். குறிப்பாக செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் அம்மன்குடிக்குச் சென்று, குங்கும வண்ண வஸ்திரம், எலுமிச்சை மாலை சமர்ப்பித்து, பயத்தம் பருப்பு பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், ராகு கிரகப் பாதிப்புகள் விலகும்; திருமண தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற விசேஷ நாள்களில் அம்மன்குடி துர்கைக்கு நிகழும் வழிபாடுகளில் கலந்துகொண்டு தரிசித்து வந்தால், குடும்ப ஒற்றுமை ஓங்கும்; எதிரிகள் தொல்லை ஒழியும்; சகல ஐஸ்வரியங்களும் பொங்கிப் பெருகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *