தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு|‘Resign, Dharmendra Pradhan!’ Jyothika Backs Student Movement

Spread the love

வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர‌ பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.

இந்தக் கருத்தை முன்வைத்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.

அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது…

“உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள் தர்மேந்திர பிரதான்!

விலகுங்கள்!

நம் நாட்டின் எதிர்காலமான மாணவர்களுடன் நான் துணை நிற்கிறேன்!

வெளிப்படையான பொறுப்புணர்வுக்கு ஆதரவாக நிற்கிறேன்!

ஜோதிகா இன்ஸ்டா ஸ்டோரி

ஜோதிகா இன்ஸ்டா ஸ்டோரி

ஜனநாயக இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கிறேன்!

சீர்திருத்தப்பட்ட கல்விமுறைக்கு ஆதரவாக நிற்கிறேன்!

சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே மற்றும் சௌரவ் தாஸ்… ஒரு தாயாக, எங்கள் பிள்ளைகளும் உங்களைப் போல வளர வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்!

தயக்கமின்றி தைரியமாகச் செயல்படும் “Gen Z’ தலைமுறையை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால்…

‘நாம்தான்’ இந்தியா என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

இந்த அடக்குமுறையையும் அழுத்தத்தையும் உடைத்தெறிந்ததற்கு நன்றி!

எங்களை பயமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி CJP!” என பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *