தனிநபர் வருமானம்: குஜராத், உ.பி-யை முந்திய தமிழ்நாடு! – உலக வங்கி சொல்லும் புள்ளி விவரம் என்ன?

Spread the love

இன்றைக்குப் பலருக்கும் இருக்கிற மிகப் பெரிய குறை, நமக்குப் போதிய வருமானம் இல்லை என்பதுதான். பலரும் நேரம், காலம் பார்க்காமல் உழைக்கத்தான் செய்கிறார்கள். காலை 10 மணி தொடங்கி மாலை 7 மணி வரை கட்டாயம் வேலை பார்க்க வேண்டிய சூழல் பல அலுவலகங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மாதச் சம்பளம் போதிய அளவு கிடைக்கிறதா என்று கேட்டால், பலரும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.

நாம் செய்யும் வேலைக்கு நாம் பெறும் மாதச் சம்பளம் அதிகம் அல்லது குறைவு என்று யாரும் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. அதற்கு ஓர் ஒப்பீடு வேண்டும். என் சம்பளம் ஓரளவுக்கு அதிகம் அல்லது குறைவு அல்லது மிகவும் குறைவு என்று சொல்ல ஓர் ஒப்பீடு வேண்டும். இந்த ஒப்பீட்டின்படி நம் சம்பளம் குறைவு என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், நம் சம்பளத்தை எவ்வளவு அதிகரிக்க வேண்டும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த ஒப்பீடு எது?

பணம்
பணம்

மாதச் சம்பளத்தை எதனுடன் ஒப்பிடுவது?

அந்த ஒப்பீடுதான், உலக வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் ஆண்டுதோறுமான தனிநபர் சராசரி வருமான அளவு. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் சராசரியாக எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், இது கடந்த ஆண்டைவிட எந்த அளவுக்கு அதிகம் என்பதை ஒவ்வோர் ஆண்டும் உலக வங்கி வெளியிடுகிறது. சமீபத்தில் அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டது உலக வங்கி.

உலக வங்கியானது, ஒவ்வொரு நாட்டு மக்களின் சராசரி தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் அதிக வருமானம் ஈட்டும் நாடுகள், உயர் நடுத்தரப் பிரிவினர், கீழ் நடுத்தரப் பிரிவினர் எனப் பல வகையாகப் பிரிக்கிறது.

1175 டாலர்களுக்கும் குறைவாக சராசரி ஆண்டு தனிநபர் வருமானம் ஈட்டும் மக்கள் உள்ள நாடுகள் குறைந்த வருமானம் (low income) ஈட்டும் மக்கள் வசிக்கும் நாடுகளாகும்.

1175 முதல் 4635 டாலர்கள் வரை சராசரி தனிநபர் வருமானம் ஈட்டும் மக்கள் உள்ள நாடுகள், கீழ் நடுத்தர வருமானம் (lower middle income) கொண்ட மக்கள் வசிக்கும் நாடுகளாகும்.

4635 டாலருக்கு மேல் சரசரி தனிநபர் வருமானம் ஈட்டும் மக்கள் உள்ள நாடுகள் உயர் நடுத்தர வருமானம் கொண்ட (upper middle income) மக்கள் வசிக்கும் நாடுகளாகும்.

14,375 டாலர்களுக்கு மேல் சராசரி தனிநபர் வருமானம் ஈட்டும் மக்கள் உள்ள நாடுகளை அதிக வருமானம் (higher income) ஈட்டும் நாடுகளாகும். அமெரிக்கா, சில ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் இந்தப் பிரிவில் உள்ளன.

உலக வங்கியானது சமீபத்தில் இலங்கை, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை உயர் நடுத்தர வருமானம் (higher income) ஈட்டும் நாடுகளாக சொல்லி இருக்கின்றன. இந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சியானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் வசிக்கும் மக்களின் வருமானமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய மக்களின் சராசரி வருமானம்…

இந்திய மக்களின் சராசரி தனிநபர் வருமானமானது இந்திய அளவில் கீழ் நடுத்தர (lower middle income) வருமானப் பிரிவில்தான் உள்ளது. அதாவது, 1175 முதல் 4635 டாலர்கள் ((இந்திய ரூபாய் மதிப்பின்படி 1,11,603 முதல் 4,40,569 வரை) சராசரியாக ஆண்டு வருமானம் ஈட்டும் மக்கள் வசிக்கும் நாடாகத்தான் நம் நாடு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சில மாநில மக்கள் இன்னும் அதிகமாக சம்பாதிப்பதால், அவர்கள் உயர் நடுத்தர (upper middle income) வருமானம் கொண்ட மக்கள் வசிக்கும் மாநிலங்களாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்திய மாநிலங்களில் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் அதிகம் ஈட்டும் மக்கள் வசிக்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது டெல்லி. இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் ஆண்டுதோறும் சராசரியாக 6217 டாலர்களை சம்பாதிக்கின்றனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,90,693 ஆகும்!

இரண்டாவது இடத்தில் கர்நாடக மக்கள் ஆண்டுதோறும் சராசரியாக 5579 டாலர் தனிநபர் வருமானம் ஈட்டுகிறார்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,30,054 ஆகும்!

மூன்றாம் இடத்தில் தெலங்கானா மக்கள் ஆண்டுதோறும் சராசரியாக 5,407 டாலர் தனிநபர் வருமானம் ஈட்டுகிறார்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,13,765 ஆகும்!

நான்காம் இடத்தில் தமிழ்நாடு மக்கள் ஆண்டுதோறும் 5329 டாலர் தனிநபர் வருமானம் ஈட்டுகிறார்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,06,318 அகும்!

ஐந்தாம் இடத்தில் குஜராத் மக்கள் ஆண்டுதோறும் 4734 டாலர் தனிநபர் வருமானம் ஈட்டுகிறார்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் 4,49,797 ஆகும்!

மகாராஷ்ட்ரா மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 4,628 ஆகவும், ஹரியானா மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 4,627-ஆகவும், கேரளா மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 4,610-ஆகவும் உள்ளன.

ஆனால், உத்தரகண்ட் மாநில மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 1,470 டாலர்களாகவும், உத்தரப்பிரதேச மாநில மக்களின் சராசர் வருமானம் 1,403 டாலர்களாகவும், பீகார் மாநில மக்களின் ஆண்டு வருமானம் வெறும் 984 டாலர்களாகவும் (இந்திய ரூபாய் மதிப்பின்படி, 93,405) உள்ளன. இந்த மாநில மக்களுடன் ஒப்பிடும்போது, தமிழக மக்களின் சராசரி ஆண்டு வருமானம் மிக அதிகம்தான்.

தனிநபர் வருமானம்!

தமிழக மக்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்வது எப்படி?

தமிழக மக்கள் ஆண்டுதோறும் 5,329 டாலர் தனிநபர் வருமானம் ஈட்டுகிறார்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,06,318 அகும் என்று ஏற்கெனவே பார்த்தோம். இந்த ரூ.5,06,318 என்பது சராசரி ஆண்டு வருமானம்தான். பலரது சராசரி ஆண்டு வருமானம் என்பது இதைவிடக் குறைவாக இருக்கலாம். இன்னும் சிலரது ஆண்டு சராசரி வருமானம் ரூ.5 லட்சத்தைவிட மிக அதிகமாகவும் இருக்கலாம்!

ரூ.5 லட்சத்தைவிட ஆண்டுதோறும் சராசரியாக அதிகமாக சம்பாதிக்கும் தமிழகத்து மக்கள், இந்த சராசரி அளவைவிட எந்த அளவுக்கு அதிகமாக சம்பாதிக்கிறோம்; இந்த வருமானத்தைத் தொடர்ந்து அதிகரிக்கத் தேவையான வழிகளை செய்துகொண்டே இருக்கலாம். உதாரணமாக, இந்த ஆண்டு உங்கள் சராசரி சம்பளம் ரூ.6 லட்சம் எனில், இதை அடுத்த ஆண்டுக்குள் 10% முதல் 20% வரை அதிகரிக்க என்ன வழி என்று தேடலாம். ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் ஆண்டுதோறும் இன்னும் 10% – 20% வருமானத்தை உயர்த்திக்கொள்வதன் மூலம் இன்னும் சிறப்பான நிலையை வாழ்க்கையில் அடையலாம்!

ஆனால், ரூ.5 லட்சத்தைவிடக் குறைவாக சம்பாதிப்பவர்கள்தான் இந்த சராசரி ஆண்டு வருமானத்தை மிக கவனமாக எதிர்கொண்டு அதிகம் சம்பாதிக்கும் வழிகளைத் தேட வேண்டும். உதாரணமாக, சராசரி ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக இருப்பவர்கள், தங்கள் வருமானத்தை ரூ.5 லட்சமாக உயர்த்திக்கொள்ளும் வழிகளைத் தேடலாம். ஒரே ஆண்டில் ரூ.2 லட்சம் ரூபாய்க்கு வருமானத்தை உயர்த்திக்கொள்வது கடினம் எனில், அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்த அளவுக்கு வருமானத்தை ஈட்ட முடிவதற்கான வழிகளைத் தேடலாம்.

ஆனால், ஆண்டு வருமானத்தை எப்படி உயர்த்திக்கொள்வது என்பதுதான் பலரது கேள்வி. இதற்கான பதிலை ஒருவர் வெளியில் இருந்து சொல்வதைவிட அவரவர் நன்கு யோசிப்பதன் மூலமே அதற்கான பதிலைக் கண்டுபிடிக்க முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் எல்லோருக்கும் வரவேண்டும். அப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டாலே போதும், என்ன செய்தால் அதிகம் சம்பாதிக்க முடியும் என்கிற கேள்வி பிறந்து, அதற்கான பதிலை எல்லோருமே தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

உதாரணமாக, அலுவலகத்தின் இன்னும் சிறப்பாக செயல்படுவதன் மூலம் அதிக சம்பளம் பெறமுடியுமா என்று பார்க்கலாம். அலுவலக வேலை சீக்கிரம் முடிந்துவிடுகிறது எனில், இன்னொரு இடத்தில் பார்ட் டைம் வேலை பார்க்கலாம். விடுமுறை நாட்களில் இன்னொரு நிறுவனத்தின் வேலையைப் பார்க்கலாம். அல்லது, நன்கு தெரிந்த வகையில் சில பிசினஸை செய்யலாம். ஒரு சிறிய கடையை நடத்தலாம். விடுமுறை நாட்களில் மட்டும் கடையை நடத்தலாம்! அதிகம் சம்பாதிப்பதற்கு இப்படி பல வழிகள் இருக்கவே செய்கின்றன.

இப்படி முயற்சி எதுவும் செய்யாமல், திடீரென நம் சம்பளம் உயர்ந்துவிடும் என்று நாம் கனவு கண்டு சும்மா இருக்கக் கூடாது. ஓரளவுக்கு மேல் நாம் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து அதிகமான சம்பளத்தையும் எதிர்பார்க்கவும் முடியாது. அரசாங்கமே எல்லாவற்றையும் நமக்கு செய்து தந்து, நம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று காத்திருக்கவும் முடியாது!

ஆண்டு சராசரி வருமானத்தைப் பொறுத்தவரை, இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டோம், அடுத்த எங்கு செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டுவிட்டோம். இனி சிந்தித்து செயல்பட்டு, சராரி ஆண்டு வருமானத்தைப் பெருக்க வேண்டிய வேலை மக்களிடம்தான் இருக்கிறது.

மக்களின் வருமானம் அதிகரித்தால், மாநிலத்தின் வருமானம் அதிகரிக்கும்; நாட்டின் வருமானமும் அதிகரிக்கும். மற்றவர்களையோ அல்லது அரசாங்கத்தையோ குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை. இந்த உண்மையைத் தெரிந்துகொண்டபிறகு இனி நாம் என்ன செய்யப் போகிறோம்?

வருமானம் இல்லை

முதலீட்டு   ஆலோசனை   வேண்டுமா?

‘லாபம்’ வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் ₹1 கோடி சேர்ப்பது எப்படி? – 40+ வயதினருக்கான சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்! வரும் புதன், ஜூலை 8 மாலை 7 மணிக்கு. இப்போதே பெயரை முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-jul08-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jul08_2026

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்…

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *