தமிழகத்தில் தீபாவளி கொலைகள்: அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்த சுப.வீரபாண்டியன்|’Is It a Murder Competition?’ Suba Veerapandian Mocks Minister

Spread the love

தீபாவளி (நவம்பர் 8) அன்று, தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.

இந்தக் கொலைச் சம்பவங்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோகனிடம் கேட்கப்பட்டபோது, “தீபாவளி பண்டிகை நாளில் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு தீபாவளியன்று 6 கொலைகளும், அதற்கு முந்தைய ஆண்டு 11 கொலைகளும் நடைபெற்றுள்ளன.

பண்டிகை நாள்களில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது புதிதல்ல. திட்டமிட்டு ஆளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன” என்று பதிலளித்திருந்தார்.

சுப.வீரபாண்டியன் பதிவு

சுப.வீரபாண்டியன் பதிவு

ராஜ்மோகனின் பதிலுக்குத் திராவிடப்பள்ளியின் இயக்குநர் சுப.வீரபாண்டியன், “தீபாவளி நேரத்தில் தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளனவே என்று நிருபர்கள் கேட்க,

அமைச்சர் ராஜ்மோகன், சென்ற தீபாவளி நேரத்தில் எவ்வளவு கொலைகள், அதற்கு முந்திய தீபாவளியில் எவ்வளவு கொலைகள் என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்கிறார்.

ஓ…. ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல் இருக்கிறது!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *