இது கடன் வழங்குநர்கள் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நெருக்கடியில் உள்ள கடன் பெற்றவர்களின் கடன்களை நிதி ரீதியாக மறுசீரமைப்பு செய்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கு, கடந்த மூன்று நிதியாண்டுகளில் எந்தவிதமான கடன் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) தெரிவித்துள்ளது.
நபார்டின் (NABARD) ‘ENSURE’ இணையதளத்தில் வங்கிகள் அளித்துள்ள தகவல்களின்படி, பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள விவசாயக் கடன்களின் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என்று பதிலளித்தார்.

அதையடுத்து எம்.பி ரவிக்குமார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் முதலாளிகள் பெற்ற கடன்கள் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒன்றிய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது.
அமைச்சர் கொடுத்துள்ள பதிலில் உள்ள அட்டவணையில் பார்க்கும்போது தமிழ்நாட்டில் விவசாயிகள் பெற்ற கடன்தான் இந்தியாவிலேயே அதிகமாக உள்ளது. 31.03.2026 நிலவரப்படி தமிழ்நாட்டு விவசாயிகள் பெற்றுள்ள கடன் நிலுவைத் தொகை ரூ.3,44,996.64 கோடி (ரூபாய் மூன்று லட்சத்து நாற்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு கோடி)’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.