தமிழக கோவில்களுக்கு அசாமிலிருந்து 5 யானைகள்; மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த ‘துர்கா’ | 5 elephants from Assam for Tamil Nadu temples; ‘Durga’ arrives Meenakshi Amman Temple

Spread the love

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒட்டகமும் வாங்கப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டது. 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரும் 17 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை அசாமிலிருந்து வாங்கிய “துர்கா’ யானை கொண்டு வரப்பட்டது.

கோயில்களுக்குப் புதிதாக யானைகள் வாங்கவோ, தானமாகப் பெறவோ கூடாது என்று தனி நீதிபதி விதித்திருந்தது.

துர்கா யானை

துர்கா யானை

இந்தத் தடையைச் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. 

இதனால் அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த 5 வயது பெண் யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்திற்கு வந்தடைந்த இந்த யானைக்கு பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *