தமிழக மின்துறையில் நுழையும் AI: சென்னை ஐஐடி-யுடன் கைகோர்க்கும் மின்வாரியம்! – பலன் என்ன? | TN Electricity Department signs MoU with IIT Madras

Spread the love

தமிழக மின்கட்டமைப்பை தரம் உயர்த்தி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, சென்னை மின்வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மாநிலத்தின் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம் மற்றும் பகிர்மானத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல், தரவு பகுப்பாய்வு போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மின்வாரியத்தில் புகுத்தப்பட உள்ளன. இதன் மூலம், மின்கட்டமைப்பின் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

ஐஐடி மெட்ராஸ் - தமிழ்நாடு மின்சாரத்துறை ஒப்பந்தம்!

ஐஐடி மெட்ராஸ் – தமிழ்நாடு மின்சாரத்துறை ஒப்பந்தம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *