தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்; கொப்பரை, தோட்டாபுரி மாம்பழம் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்!

Spread the love

தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கொப்பரை தேங்காய் மற்றும் தோட்டாபுரி மாம்பழங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதியை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்த பரிந்துரையின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டிற்கான கொப்பரை கொள்முதல் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 87,226 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இதில் 87,000 மெட்ரிக் டன் மில்லிங் கொப்பரையும், 226 மெட்ரிக் டன் பால் கொப்பரையும் அடங்கும்.

விவசாயம்

விவசாயம்
Meta AI

இந்த கொள்முதல் முழுவதும் விலை ஆதரவு திட்டத்தின் (Price Support Scheme – PSS) கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையான (MSP) அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.1,049.16 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

சந்தை விலை சரிவால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை குறைந்த விலையில் விற்க வேண்டிய நிலை ஏற்படாமல் தடுக்கவும், கொப்பரை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *