தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்தான் – அதிர்ச்சி அளிக்கும் உடற்கூறாய்வு அறிக்கை!|

Spread the love

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மான் வேட்டையாட வந்தவர்களுடன் நடந்த மோதலில், தற்காப்புக்காக தூரத்திலிருந்து சுட்டதாக வனத்துறையினர் கூறினர்.

உடற்கூறாய்வு அறிக்கை நகல்

உடற்கூறாய்வு அறிக்கை நகல்

“இது மோசமான சம்பவம், அப்பாவிகளை வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்” என்று, அங்கு வசிக்கும் மக்களும், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட கன்னட அமைப்பினரும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

இந்த நிலையில் மைசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கையிலுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், கொல்லப்பட்ட மூன்று பேரும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்தே சுடப்பட்டுள்ளனர் என்றும், ஜான்ரோஸ் பீட்டரின் இடது காது பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செண்டி மீட்டர் நீளத்திற்கு ஆழமான கடுமையான காயம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *