தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: இன்று முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் விஜய் ஆலோசனை! | CM vijay will discuss on tn budget from today

Spread the love

தமிழக நிதிநிலை அறிக்கையை இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

முதலமைச்சர் விஜய் துறை ரீதியான ஆலோசனை கூட்டங்களை இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரைமேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துறையின் அமைச்சர்கள்,செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட `வெற்றி தமிழகம் தொலைநோக்கு” திட்டத்தில் இடம்பெற்றுள்ள திட்டங்களை ஓர் ஆண்டு, மூன்று ஆண்டு , 5 ஆண்டு என செயல்படுத்துவது, நிதிநிலை அறிக்கையில் இடம்பெறக்கூடிய திட்டங்கள் மற்றும் அதற்கு தேவையான நிதி தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

துறை ரீதியாக வெளிப்படைத்தன்மையான நிர்வாகம், செயல்திறன் ஆகியற்றவை குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது

இன்று காலை 11 மணியளவில் உணவு , கூட்டுறவு மற்றும் நுகர்வோர் நலத்துறை சார்பில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *