அடுத்ததாக, கடன் வாங்கும்போதும், வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வருமான வரிக் கணக்குத் தாக்கலைக் கேட்பார்கள். அதற்காக கடைசி நேரத்தில் அலையாமல், ஆரம்பத்தில் இருந்தே பக்காவாக வைத்துக்கொள்வது நமக்கு தான் நன்மை.
அரசு வேலையில் இருக்கும் பலரும், எனக்கு அரசாங்கம் வரிக் கட்டிவிடும். நான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. அரசாங்கம் யாருக்காகவும் வரிக் கட்டாது. அவரவர் வரியை அவர்கள் தான் கட்ட வேண்டும்.
உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் கூட இருந்திருக்கலாம். கணக்குத் தாக்கல் செய்யாததால், அது உங்களுக்கு திரும்ப கிடைக்காமலே போய்விடும். அதனால், முன்பே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவது நல்லது”.