தமிழ்நாடு மழை எச்சரிக்கை: 26-ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?|Rain Alert! Which Tamil Nadu Districts Will Get Heavy Rain Today?

Spread the love

2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதி வரை கொளுத்திய வெயில், இப்போதுதான் லீவு எடுத்திருக்கிறது.

கடந்த வாரத்திலிருந்து தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.

நேற்று (அக்டோபர் 21) இந்திய வானிலை மையம் கொடுத்துள்ள தகவலின்படி,“தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக,

அக்டோபர் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எந்த மாநிலங்களில் எப்போது மழை?

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 26-ம் தேதியும்,

கேரளாவில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும்,

லட்சத்தீவுப் பகுதிகளில் அக்டோபர் 21, 22 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும்,

தெற்கு உள் கர்நாடகப் பகுதிகளில் அக்டோபர் 22 முதல் 25-ம் தேதி வரையிலும்ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *