மேலும் 3 பேர் கைது
நடிகர் டைகர் ஷெராஃப் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஹரியானாவைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கித் கதக், ஜதின் மற்றும் சமீர் ஆகியோர் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சோனிபட்டைச் சேர்ந்த ஆடைக்கடை உரிமையாளரான சமீர், இந்த வழக்கில் ஒரு முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்.
அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திருக்கலாம் என்றும், அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் துப்பாக்கிச்சூட்டில் நேரடியாக தொடர்புடைய 3 பேருடன் மும்பையில் தங்கி அவர்களுக்கு உதவியதாகவும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பே அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் நேரடியாக ஈடுபட்ட மூவர் கோட்டாவிலிருந்து அழைத்து வரப்பட்டு, வரும் 31-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட தடயவியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்தத் துப்பாக்கிகள் இன்னும் கண்டெடுக்கப்படவில்லை. இது குறித்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.