தமிழ்நாடு வருவாய் பெருக்குக் குழு: மாண்டெக் சிங் தலைமையில் புதிய முயற்சி|TN Picks Top Economists to Find New Revenue Sources

Spread the love

தமிழ்நாட்டில் “வருவாய் பெருக்குக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மரிய வில்சன் என்ன சொல்கிறார்? 

இந்தக் குழு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன், “கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மாநிலத்தின் சொந்த வருவாய் (State’s Own Tax Revenue – SoTR) மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வருவாய் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், தமிழக அரசு உயர்மட்ட ‘வருவாய் பெருக்குக் குழு’ (Revenue Augmentation Committee) ஒன்றை அமைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மரிய வில்சன்

அமைச்சர் மரிய வில்சன்

தமிழ்நாட்டின் வருவாயை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில், புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மாண்டெக் சிங் அலுவாலியா அமர்த்தப்பட்டுள்ளார்.

இவருடன் இன்னும் ஐந்து உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள்…

முனைவர் கே.பி.கிருஷ்ணன்,

அர்பிந்த் மோடி,

ஓய்வுப்பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி நஜிப் ஷா,

எம்.ஏ.சித்திக் ஐ.ஏ.எஸ்,

முனைவர் சுரேஷ் பாபு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *