“தமிழ்நாட்டில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்?”- காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன் | dmk dhayanithi maran slams congress for delimitation

Spread the love

த.வெ.க அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?

Fair Delimitation என்ற நிலைப்பாட்டிலிருந்து No Delimitation என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா?

அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

No Delimitation என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான திரு. ரேவந்த் ரெட்டி அவர்கள், Delimitation நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்?

தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது PettyPolitics அன்றி வேறல்ல.

நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்” என்று தயாநிதி மாறன் சாடியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *